பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கூட்டமைப்புத் தலைவர் அப்பாரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலர் பாரி, பொருளாளர் ஞானசவுந்தரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் செயலர்களை ஊராட்சியில் அவமதிக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவின் நடவடிக்கையை கண்டிப்பது.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்துவதுடன், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது. கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்படும் நிலையில் பி.எம்.ஏ.ஓய்., வீடு கட்டும் பணிகள் மற்றும் கழிப்பறை கட்டும் பணிகள் குறித்து நிர்பந்திக்க கூடாது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X