இந்தியா

புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கழிவுநீர் வாய்க்கால்களில் டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை வீசி அடைப்பு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் எச்சரித்துளளார்.

அவரது செய்திக் குறிப்பு:கோடை மழை ஆரம்பித்துவிட்டது., சாலையோர வாகனம் பழுது பார்க்கும் மற்றும் பஞ்சர் ஒட்டும் கடைகளில் பயன்படுத்தப்படும் டயர், டியூப்களை தெருவோரம் மற்றும் வாய்க்காலில் வீசக் கூடாது.மேலும், டீக்கடை, உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை கழிவுநீர் வாய்க்காலில் எறிந்து அடைப்பு ஏற்படுத்தக் கூடாது. மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறுவோர் மீது நகராட்சி சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அபராதம் விதித்தல், வணிக உரிமம் ரத்து செய்தல், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X