கிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 27, 2020
Share

திட்டக்குடி : திட்டக்குடியில் நடப்பு பசலி ஆண்டிற்கான கிராம கணக்குகளை சப் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திட்டக்குடி தாலுகாவில், நடப்பு பசலி 1429ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்திற்கான கிராம கணக்குகளை விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்திற்கான கிராம கணக்குகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.சப்-கலெக்டர் கூறுகையில்,"வருவாய் தீர்வாய நாளன்று பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறும் நடைமுறை, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடப்பு ஆண்டில் செயல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் வருவாய் தீர்வாயத்தின் போது, பொது மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் கோரிக்கை மனுக்களை வழங்காமல் தங்கள் மனுக்களை அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாகவும், https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள முகவரி வாயிலாகவும் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X