பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிலவரி கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தாலுக்கா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஜெயக்குமார் பங்கேற்று கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.நேற்று ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட 38 கிராமங்களின் கணக்குகளை ஆய்வு செய்தார். மேலும் வரும் 29ம் தேதி காவனுார் குறுவட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களிடம் மனுக்கள் பெறவில்லை.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை இ-சேவை மையங்கள் மூலம் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 29ம் தேதி முதல் ஜூலை மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் முகமது அசேன், தலைமையிடத்து துணை தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சசிக்குமார், வட்ட துணை நில ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஆர்.ஐ. குமார கிருஷ்ணன், வி.ஏ.ஓ., சரத்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X