இந்தியா

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பட்ஜெட் தாக்கல் செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும்.

ஆனால் கடந்த 2011ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக மூன்று அல்லது 6 மாத செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதம் சட்டசபை கூட்டி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.அதேபோல் இந்த ஆண்டும் மார்ச் 30ம் தேதி மூன்று மாத அரசு செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. இம்மாத இறுதிக்குள் 2020-21ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி மாநில வருவாய் குறைவு, மானியம் குறைப்பு ஆகியவற்றை கணக்கிட்டு பட்ஜெட் தொகை ரூ.9,000 கோடியாக குறைத்து மதிப்பீடு செய்து ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கோப்பு அனுப்பியுள்ளது.இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் ஒப்புதல் பெற காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் இம்மாதம் 30ம் தேதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X