வணிகர்கள் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்கள் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Added : ஜூன் 27, 2020
Share

கடலுார் : சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகளுக்கு, கடலுார் வணிகர்கள் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடலுாரில் கடையடைப்பு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மருந்து கடைகள் பகல் 12:00 வரையும், மொபைல் போன் கடைகளும் அடைக்கப்பட்டன.அண்ணா பாலம் சிக்னல் அருகே கடலுார் வணிகர்கள் பேரமைப்பு நகர தலைவர் துரைராஜ் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து, அஞ்சலி செலுத்தினர். துணைத் தலைவர் பட்டேல், செயலாளர் சீனுவாசன், பொருளாளர் முருகன், இம்பீரியல் ரோடு பகுதி செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலுார் நகர தலைவர் துரைராஜ் கூறுகையில், வியாபாரிகள் மரணம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு வியாபாரிகள் அழைத்து செல்லும்போது, பேரமைப்பின் பிரதிநிதியுடன் தான் விசாரிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அறிவித்துள்ளோம். இதனால் வணிகர்கள் பாதிக்க வாய்ப்பு இருக்காது. அதற்காக, கடலுார் நகரில் 3,300 வணிகர்கள் தற்போதைய நிலையில் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X