ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு| Railways spending Rs 2 lakh approx on each isolation coach; Rs 620 crore sanctioned by Centre | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Indian Railways, coaches, isolation wards, coronavirus

புதுடில்லி : ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கும், தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றும் நடவடிக்கை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் கூறியதாவது: ரயில் பெட்டிகளை தனிமை வார்டாக மாற்று வதற்கு, மத்திய அரசிடமிருந்து, 620 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. ஒவ் வொரு பெட்டியையும் வார்டாக மாற்றுவதற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. கொரோனாவால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், ஏற்கனவே சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர்.

தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய மாநிலங்களுக்கு திரும்பும் நடவடிக்கை அதிகரித்து உள்ளது. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து, நாட்டின் பெரும் நகரங் களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் வாயிலாக, இது தெரியவந்து உள்ளது.மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X