சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய, சுகாதார ஆய்வாளருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

கொரோனா தொற்று கண்டறியும் பணியில் ஈடுப்பட்ட கங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஆண் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமை படுத்தி, பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சுகாதார நிலையம் மூடப்பட்டது.மேலும், அந்த சுகாதார ஆய்வாளர் அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு நாள் பணி புரிந்ததால், அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

அங்கு பணி புரிந்த சுகாதார ஆய்வாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டு, அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X