மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் கவர்னருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ., நன்றி | Dinamalar

இந்தியா

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் கவர்னருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ., நன்றி

Added : ஜூன் 27, 2020
Share

புதுச்சேரி : மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க ஒப்புதல் வழங்கிய கவர்னருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:முதியோர் பென்ஷன் வாங்கும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது என கவர்னர் கூறியதாக மீன்வளத்துறை அமைச்சர் கூறினார். இதன் மூலம் 8,000 மீனவர்கள் தடைக்கால நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்தும், அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டியும் அ.தி.மு.க., சார்பில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம்.அதன் காரணமாக 19,100 மீனவர்களுக்கு, இந்தாண்டு தடைக்கால நிவாரணம் வழங்கிட கவர்னர் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும், முதியோர் பென்ஷன் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் உதவி வழங்க கூடாது என காங்., அரசு வகுத்திருந்த விதியை நீக்கம் செய்யவும் அரசுக்கு கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த விதி நீக்கம், வரும் காலத்தில் முதியோர் உதவிதொகை பெறும் மீனவர்கள், தடையின்றி தடைக்கால நிவாரணம் பெற முடியும்.மீனவர்கள் நலனுக்காக அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பின், கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த கவர்னருக்குநன்றி தெரிவித்து கொள்கிறோம்.பட்ஜெட்டில் மீனவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கி, இன்சூரன்ஸ், டீசல் மானியம், இயற்கை சீற்ற உதவி, முதியோர் உதவித்தொகை, படகு மானியம், கடன் உதவிகள் வழங்க ஆளும் காங்., அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X