கூனிச்சம்பட்டில் 105 பேருக்கு உமிழ்நீர் சேகரிப்பு முகாம்| Dinamalar

இந்தியா

கூனிச்சம்பட்டில் 105 பேருக்கு உமிழ்நீர் சேகரிப்பு முகாம்

Added : ஜூன் 27, 2020
Share

திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிய உமிழ்நீர் மாதிரி சேகரிப்பு முகாம் நேற்று நடந்தது.

திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கே.ஆர்.பாளையம், கொடாத்துார், கைக்கிலப்பட்டு, கூனிச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், திருக்கனூர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய உமிழ் நீர் சேகரிப்பு முகாம் கூனிச்சம்பட்டில் நேற்று நடந்தது.முகாமில், செல்வம் எம்.எல்.ஏ., பொது சுகாதார இணை இயக்குனர் ரகுநாதன், மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியம், டாக்டர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்திய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 105 பேரிடம் இருந்து உமிழ்நீர் மாதிரியை சேகரித்தனர்.தொடர்ந்து, செல்வம் எம்.எல்.ஏ., கூறுகையில், இப்பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு துவங்கியபோதே, முகாம் அமைத்து பரிசோதனை செய்திட வலியுறுத்தினேன். ஆனால், அரசின் அலட்சியத்தால், கொரோனா தொற்று அதிக அளவில் பரவிய பிறகு, பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.மேலும், இங்கு உள்ளவர்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதால், உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X