இந்தியா

ஆழ்கடலில் பழுதான விசைபடகு புதுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பாகூர் : ஆழ்கடலில் பழுதான மீன்பிடி விசைபடகில் இருந்த 5 மீனவர்கள், கடலில் குதித்து நீந்தி உயிர் தப்பினர்.

பழுதான படகு புதுக்குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சவுந்தரி,50; இவருக்கு சொந்தமான மீன்பிடி விசை படகில், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர்,40; புகழேந்தி,31; கபிலன்,49; மலர்வண்ணன்,30; அன்பரசன்,32; ஆகியோர் கடந்த 24ம் தேதி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது.அதனை சரி செய்ய மீனவர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதனால், துறைமுக பகுதியை நோக்கி படகினை கொண்டு சென்றனர். இதனிடையே, கட்டுப்பாட்டை இழந்த படகு, அலையின் சீற்றத்தால், அலைமோதியது. ஒரு கட்டத்தில் படகு கவிழும் நிலை ஏற்பட்டதால், அதிலிருந்த மீனவர்கள் 5 பேரும், கடலில் குதித்து நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர்.இதனிடையே, பழுதான படகு, நேற்று முன்தினம் இரவு தவளக்குப்பம் அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. படகு மட்டுமின்றி அதிலிருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்தன. இது குறித்து மீன்வளத் துறைக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X