பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் மதிப்பெண்இணையத்தில் பதிவேற்றம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சியை கணக்கிடும் பணி நடந்து வருகின்றது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 313 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற 20,798 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப்பதிவேடுகள் சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணி நடந்தது.இதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மற்ற பாடத்தேர்வுகளை மாணவர்கள் எழுதிய நிலையில், நடைபெறாத 3 பாடங்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல்களும் ஒப்படைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடு சரிபார்க்கும் பணிகள் தற்போது விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய 3 கல்வி மாவட்ட அலுவலர்கள் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், சரிபார்ப்பு பணி முடித்த ஆசிரியர்கள் இணையதளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான மதிப்பெண் விவரங்களை நேற்று முதல் பதிவேற்றம் செய்ய துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X