பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணத்தில் ஜமாபந்தி துவக்கம் இ-சேவை மூலம் மனுக்கள் பதிவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மரக்காணம் : மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்த, ஜமாபந்தியில் திண்டிவனம் சப் கலெக்டர் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார்.

மரக்காணம் தாலுக்கா அலுவலத்தில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மனு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படும் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.நேற்று திண்டிவனம் சப் கலெக்டர் அனு தலைமையில் மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் சிறுவாடி குறு வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களின் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார்.

27ம் தேதி பிரம்மதேசம் குறு வட்டமும், 30ம் தேதி மரக்காணம் குறு வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராம கணக்குகளும் ஆய்வு செய்யப்படும். தாசில்தார் ஞானம், வருவாய் தீர்வாய தணிக்கை மேலாளர் செந்தில், தனி வட்டாட்சியர் சுந்தரராஜன், துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தலைமையிடத்து அலுவலர் பிரபாகரன், தலைமை நில அளவர் சந்திரஹாசன், கிராம நிர்வாக அலுவலர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X