இந்தியா

பைக் மீது கார் மோதல்: இரு வாலிபர்கள் காயம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பாகூர் : பைக் மீது கார் மோதிய விபத்தில், இரு வாலிபர்கள் காயமடைந்தனர்.தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன், 36; கிருமாம்பாக்கம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர் திலீப்குமார்.

இவரும், கடந்த 20ம் தேதி புதுச்சேரிக்கு சென்று, பிஒய் 05 எக்ஸ் 2430 என்ற பதிவெண் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, ஜெயகாந்தன் ஓட்டிச் சென்றார்.புதுச்சேரி - கடலுார் சாலை இடையார்பாளையம் சந்திப்பு அருகே சென்ற போது, பின்னால் வந்த பிஒய் 01 பிபீ 5116 என்ற பதிவெண் கொண்ட இண்டிகா மான்சா கார் பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த, ஜெயகாந்தன், திலீப்குமார், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.புகாரின்பேரில், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த வேல்முருகன் மீது தெற்கு போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X