சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய23,209 பேர் கைது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 23,209 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று முன்தினம் 25ம் தேதி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகள் மீது 482 வழக்குகளை போலீசார் பதிவு செய்து, 482 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தடை உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 25ம் தேதி வரை 22,787 வழக்குகள் பதிவு செய்து, 23,209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 13,116 இருசக்கர வாகனங்கள், 319 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 438 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X