இந்தியா

வாலிபருக்கு கத்தி வெட்டு இருவருக்கு போலீஸ் வலை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பைக்கை சேதப்படுத்திய தகராறில், வாலிபரை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம், சாரணப்பேட், புதுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ்,21; இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது நண்பர்களுடன், வழுதாவூர் சாலை, பாரதி வீதி சந்திப்பு அருகே பைக்குடன் நின்றிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த திலாஸ்பேட்டையை சேர்ந்த சுந்தர், கவுதம் ஆகியோர், தகராறு செய்து, சங்கர்கணேஷ் பைக்கை சேதப்படுத்தினர்.சங்கர்கணேஷ் தனது நண்பர்கள் முகி, நந்தக்குமார், சூர்யா, சாமி, நிஷாந்த் ஆகியோருடன் சென்று, சுந்தர், கவுதைமை சந்தித்து பைக்கை சரி செய்து கொடுக்குமாறு கேட்டார்.அப்போது ஏற்பட்ட தகராறில் கவுதம் தான் வைத்திருந்த கத்தியால், சங்கர் கணேஷ் இடது கையில் வெட்டினார். சுந்தர் இரும்பு கம்பியால் தாக்கினார். சங்கர்கணேஷடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

காயமடைந்த சங்கர் கணேஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, சுந்தர் மற்றும் கவுதமை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X