சோதனை சாவடியில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை சாவடியில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு

Added : ஜூன் 27, 2020
Share

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் பிளாசாவிலுள்ள வாகன தணிக்கை சாவடியில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், வெளி மாவட்டங்களிலிருந்து இ.பாஸ் இன்றி பயணிக்கும் வாகனங்கள் குறித்து சோதனை செய்ய, விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.நேற்று காலை சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போக்குவரத்து போலீசார் முகச் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு முகக் கவசம் வழங்கி நோய் தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு விளக்கமளித்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆயிரம் பேருக்கு முக கவசம் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X