இந்தியா

போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் போக்குவரத்து போலீசார் வினியோகித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 26ம் தேதியன்று, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, போக்குவரத்து போலீஸ் சார்பில், பொது மக்களுக்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டன.ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து எஸ்.பி., முருகவேல் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் ேஹமா, ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாகூர்கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் பொது மக்களுக்கு போதை பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, தனசேகர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.காட்டேரிகுப்பம்காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் கடைவீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா தலைமை தாங்கி, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X