பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் திறந்தவெளியில் நெல் ஏலம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சி ஒருங்கு முறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் நெல் ஏலம் நடந்து வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு செஞ்சி பகுதி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நெல் கொண்டு வருகின்றனர். இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எப்போதும் நெல் வரத்து அதிகம் இருக்கும். கடந்த மூன்று மாதங்களாக செஞ்சி வியாபாரிகள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளில் பெரும் பகுதியை இங்குள்ள மேல் கூரை உள்ள குடோன்களிலும், ஏல களத்திலும் இருப்பு வைத்துள்ளனர். இதனால் இங்குள்ள திறந்த வெளி களத்தில் நெல் ஏலம் நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் திறந்த வெளி காளத்திலிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இருந்தும் மீண்டும் திறந்தவெளி காலத்திலேயே ஏலம் நடந்தது.அடுத்து வரும் நாட்களில் தொடர்மழை பெய்ய வாய்ப்புள்ளது. திறந்தவெளி களத்தில் ஏலம் நடத்தினால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளன. இது போன்ற நிலை ஏற்பட்டால் விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவர்.

எனவே விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாத்து அடுத்து வரும் நாட்களில் மேற்கூரை உள்ள ஏல களங்களில் நெல் ஏலம் நடத்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X