கலெக்டர் தலைமையில்ஜமாபந்தி முகாம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் தலைமையில்ஜமாபந்தி முகாம் துவக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 1429ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று 26ம் தேதி முதல் துவங்கியுள்ளது. கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வரும் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை இணையதளம் மற்றும்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1429ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று 26ம் தேதி முதல் துவங்கியுள்ளது. கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வரும் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை இணையதளம் மற்றும் இ-சேவை மையம் மூலமாக https://gdp.tn.gov.in.jamabandhi என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமை கலெக்டர் அண்ணாதுரை, துவக்கி வைத்தார்.

இதில், ஜமாபந்தி அலுவலர்களுக்கான வருவாய் தீர்வாய ஆண்டு கணக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில், தாசில்தார் கணேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X