சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியத்தில் கல்லுாரி அமைக்கக்கோரிகடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் தற்காலிக கல்லுாரி மற்றும் நிரந்தர கல்லுாரி அமைக்கக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், பொது கடை அடைப்பு போராட்டமும் நடத்த போவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில், ரிஷிவந்தியத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையொட்டி தற்காலிக கல்லுாரி இயங்க அரியலுார் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, இந்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை கண்டித்து, ரிஷிவந்தியத்தில் உள்ள சில கடைகளின் முன், கல்லுாரி உரிமை மீட்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.அதில், முதல்வர் அறிவித்த கல்லுாரி ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் அமைக்காமல் பகண்டைகூட்ரோட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 கி.மீ., தொலைவில் அமைக்கப்படுவதால் ரிஷிவந்தியம் புறக்கணிக்கப்படுகிறது.எனவே, தற்காலிக கல்லுாரி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்க வேண்டும். நிரந்த கல்லுாரியை ரிஷிவந்தியம் சுற்றுப் பகுதிகளிலேயே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 1ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவதுடன், பொது கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X