சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பூக்கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

விழுப்புரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்றது. நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை கட்டுவது வாடிக்கையாக உள்ளது. மேலும், நீர்நிலை வழித்தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், கடந்த காலங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்தனர். இதனால், நகரில் உள்ள அரசு இடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதும், அந்த இடங்களை மீட்க அதிகாரிகள் வழக்குகள் தொடர்வதுமாக இருந்தது.

இந்நிலையில், விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் நேற்று முன்தினம் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது, சாலையை ஆக்கிரமித்து 10க்கும் மேற்பட்ட கடைகள் ெஷட், தரைத்தளம் அமைத்து பூ வியாபாரம் செய்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, இங்குள்ள சில வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில், சில வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால், நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு இடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X