சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகரிப்பு! தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் இறப்பு...வனப்பகுதியில் குடிநீர் நிரப்ப நடவடிக்கை தேவை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள், நாய்கள் கடித்தும், கிணற்றில் விழுந்து இறப்பதும் அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்க்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. இங்கு புள்ளிமான், குரங்கு, காட்டுடெருமை போன்ற பல்வேறு வனவிலங்குள் வசிக்கின்றன்.வன விலங்குளின் குடிநீர் தேவைக்காக காட்டு பகுதிக்குள் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வன விலங்குகள் பயன்படுத்தி வருகிறது.கோடை காலங்களில் நிலவும் வறட்சியில் தண்ணீர் குட்டைகள் முற்றிலும் வற்றிப் போகிறது.

அத்தருணத்தில், தண்ணீர் தேடியும் அலையும் மான்கள், குரங்குகள் ஊருக்குள்ளும், வயல் வெளியை நோக்கி படையெடுத்து வருகின்றன.அவ்வாரு வரும்போது, மான்கள் கிணற்றில் தவறி விழுந்து காயமடைவதும், சாலைகளைக் கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கி கடிபட்டு சாவதும் அதிகரித்து வருகிறது.கோடை காலத்தில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதியில் 'ஜெஜெ' வடிவிலான 2 அடி ஆழம் கொண்ட சிமென்ட் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், டேங்கர் லாரிகள், டிராக்டர் மூலம் நாள்தோறும் வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை.

தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் வனப்பகுதியில் குட்டைகள், தண்ணீர் தொட்டிகள் முற்றிலும் வற்றிக் கிடக்கின்றன. இதனால் வரஞ்சரம், வேளக்குறிச்சி, பொரசக்குறிச்சி, ஈய்யனுார், மரூர், பேராக்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டார வனப் பகுதிகளில் வாழும் மான்கள் நாள்தோறும் இரவில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, வனப் பகுதியில் இருந்து தண்ணீர், உணவு தேடிவரும் மான்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்ற வனப் பகுதியில் குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் குடிநீர் நிரப்ப கலெக்டர் கிரண் குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X