பொது செய்தி

தமிழ்நாடு

அக்., வரை பள்ளிகள் திறப்பில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: 'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின்
school, covid 19, coronavirus, education, coronavirus outbreak, coronavirus lockdown, பள்ளி, திறப்பு

சென்னை: 'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

அவர்களின் கருத்துக்கள் வருமாறு: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தொற்று பரவல் அதிகரிக்கும்.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்' என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.


latest tamil newsபாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்.கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyan - tirupur,இந்தியா
27-ஜூன்-202013:26:49 IST Report Abuse
Sathyan ஒரு வருடமே பாதியாக குறைகிறது ,பாடத்திட்டங்கள் குறைக்கபடுகிறது ஆனால் பெற்றோர்களின் பள்ளி செலவை மட்டும் யாரும் குறைக்க முன் வரமாட்டார்கள் ..ஆறு மாத மட்டும் நடக்கும் பள்ளிக்கு முழு பீஸையும் கட்ட சொல்லி ஏன் பெற்றோர்களின் பீஸை பிடுங்குகிறார்கள் .இதை பற்றி யாரும் கேட்கமாட்டார்களா?????
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
27-ஜூன்-202012:24:27 IST Report Abuse
R S BALA நீங்கள் பள்ளியை திறந்தாலும் இந்த ஒரு வருடம் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயாரில்லை, ரிஸ்க் எடுக்க கூடிய விஷயமில்லை இது ..
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202012:14:08 IST Report Abuse
Tamilan கோடிக்கணக்கான கோடிகள் பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டுக்கு இதில் என்ன பிரச்சினை. இந்த வருடம் இல்லாவிட்டாலும், அடுத்த வருடமாவது இன்றுள்ள பள்ளி கட்டடங்களைப்போல் பல மடங்கு கட்டடங்கள் கட்டிவிடலாம். அல்லது ரிலையன்ஸைப்போன்ற நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் ஒவ்வொருவனையும் டிஜிட்டலால் இணைக்க முடியும். அதற்க்கு ஆகும் செலவை மாக்கள், பாமர மக்கள், நடுத்தர மக்கள் உட்பட அனைவரும் உயர்தர சேவை வழங்க தங்களை, தங்களின் வாழ்க்கையை, தங்கள் உயிரைப்பணயம் வைத்து சம்பாதித்த பணத்தை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள் என்று இனியும் அரசியல் சட்ட அரசுகள் சட்ட ஒன்று இயற்றாததுதான் குறை. உலக நாடுகள் அனைத்தும் அதற்கான சட்டம் இயற்ற தயாராக உள்ளன . அதை இந்திய அரசுகள் செய்வதில் எந்த கஸ்டமும் தடையும் இருக்காது . கல்விக்காக , கல்வித்தந்தை காமராஜர் பெயர் காக்க உலகமெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X