சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரிக்கு கொரோனா தொற்று எதிரொலி ; செஞ்சி கமிட்டியில் கொள்முதல் நிறுத்த முடிவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சியில் நெல் அரிசி வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மார்ககெட் கமிட்டியில் தற்காலிகமாக கொள்முதல் செய்வதை நிறுத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

செஞ்சியில் 59 வயது நெல், அரிசி வியாபாரிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அந்த வியாபாரி செஞ்சியில் உள்ள வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று வந்துள்ளார். சிலர் அவரை சந்தித்து பேசி உள்ளனர். இந்த வியாபாரிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் கொள்முதல் செய்கின்றனர். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் வியாபாரிகள், விவசாயிகள், அலுவலக ஊழியர்களுக்கும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே செஞ்சி தாலுகா நெல் அரிசிவியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.சங்க தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.கவுரவத்தலைவர் மாணிக்கம், செயலாளர் துரைக்குமார், பொருளாளர் ஏழுமலை, இணை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் வியாபாரிகள், விவசாயிகளுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக வரும்29ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நெல் கொள்முதலை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

இதேபோல் பலதானியம் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் முடிவு செய்தனர். இது குறித்த கடிதத்தை நேற்று மாலை மார்க்கெட்கமிட்டி கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். 3ம் தேதிக்கு பிறகு சனி, ஞாயிற்றுகிழமைகள் வருவதால் மீண்டும் செஞ்சி மார்க்கெட் கமிட்டி அடுத்த மாதம் 6ம் தேதி முதல் செயல்படும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X