பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் கிணறுகளை ஆழப்படுத்தும் பணி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் கடும் வறட்சியால் கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் கரம்பாக வைத்திருந்தனர்.இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் சங்கராபுரம் பகுதியில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பின. இதனால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இதையொட்டி விவசாயிகள் வயலை உழுது சாகுபடி பணிகளைத் துவங்கினர்.தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான ஏரிகள் வறண்டன. விவசாய கிணறுகளில் நீர் மட்டமும் குறைந்தது. சாகுபடி செய்த பயிருக்கு தண்ணீர் இறைக்க முடியாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் அவதிப்பட்ட விவசாயிகள் தற்போது கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X