பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் ஸ்ரீதைரியேஷ்மொபைல் கடை திறப்பு விழா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஸ்ரீதைரியேஷ் மொபைல்ஸ் கடையை, தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் திறந்து வைத்தார்.

திண்டிவனம் - மரக்காணம் சாலை, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஸ்ரீதைரியேஷ் மொபைல்ஸ் கடை திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவிற்கு, கடை உரிமையாளர் மகேஷ் பன்னீர்செல்வம் வரவேற்றார். மயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

திறப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், நகர பொருளாளர் கண்ணன், இலக்கிய அணி சின்னச்சாமி, வழக்கறிஞர் அணி ஆதித்தன், முன்னாள் கவுன்சிலர்கள் முரளிதரன், கோபிநாத், சின்னதுரை, ஏழுமலை, ஆறுமுகம், நகர துணை செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் சின்னராஜேந்திரன், நகர இளைஞரணி ஷாகித், சாய்செந்தில், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X