பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களில் அதிக பயணிகள்நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் சமூக விலகல் இன்றி, அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகரில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பஸ்கள், வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆட்டோவில் டிரைவர் உட்பட 3 பேர் மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சி நகரில் ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிகளவில் பயணிகளை அமர வைத்து இயக்கி வருகின்றனர்.இதனால், சமூக விலகல் இன்றி நெருக்கமாக அமர்ந்து பயணிக்கின்றனர். அதில், பயணம் செய்பவர்களில் யாருக்கேனும் தொற்று இருப்பின் கொரோனா நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

அவ்வப்போது போலீசார் ஆட்டோக்களை பிடித்து வழக்குப்பதிவு செய்தாலும், விதிமுறைகளை மீறி பயணம் செய்வதும் தொடர்கிறது. எனவே, கள்ளக்குறிச்சி நகர பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சமூக அக்கறையின்றி நெருக்கமாக அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X