தமிழ்நாடு

புழுதிவாக்கம் சித்தேரிக்கு புத்துயிர்; இந்தாண்டு நீர் தேங்குவது நிச்சயம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 புழுதிவாக்கம் சித்தேரிக்கு புத்துயிர்; இந்தாண்டு நீர் தேங்குவது நிச்சயம்

புழுதிவாக்கம், சித்தேரி, மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழை பெய்தால், இந்த ஏரியில் முழுமையாக நீர் சேகரமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்:

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 169வது வார்டில் அமைந்துள்ளது புழுதிவாக்கம் சித்திதேரி. இதன் பரப்பளவு, 27 ஏக்கர்.இந்த ஏரியை பொறுத்தவரை, ஆக்கிரமிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால், கணிசமான பகுதி காப்பாற்றப்பட்டுள்ளது.பரங்கிமலை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தேரி, மாநகராட்சி வசம் வந்தது.

ஒவ்வொரு மழைக் காலத்திலும், இந்த ஏரியில் சேகரமாகும் மழைநீர், அப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஆனால், பல ஆண்டுகளாக, ஏரி பராமரிக்கப்படாமல் இருந்தது. ஏரியின் ஒரு பக்க கரையில் உள்ள பலர், தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவு நீரை, ஏரிக்குள் திருட்டுத்தனமாக, 'பைப்' அமைத்து விட்டு வந்தனர்.

இதனால், புழுதிவாக்கம் ஏரி மாசடைந்து, துர்நாற்றம் வீசியது. புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில், நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதால், எதற்கும் பயன்படாமல் உள்ளது. ஏரியில் கழிவு நீர் தொடர்ந்து கலப்பதால், நிலத்தடி நீர் மேலும் மோசமடைந்தது.மடிப்பாக்கம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பினர், நீர் நிலை ஆர்வலர்கள் என, அவ்வப்போது ஏரியை சுத்தப்படுத்தி வந்தனர்.

புனரமைப்பு பணி

இந்நிலையில், மாநகராட்சி முயற்சியால், புழுதிவாக்கம் சித்தேரிக்கு விமோசனம் பிறந்துள்ளது. கடந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக, 2.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.புழுதிவாக்கம் சித்தேரியை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தப்பட்டன. கரையின் உட்புறம், 3 அடி துாரம் பாறைகளால் தடுப்பு அமைக்கப்பட்டது. கரையில், 6.5 அடி தடுப்புடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சித்தேரி சீரமைப்பு பணிகள், 80 சதவீதம் பூர்த்தியான நிலையில், சில மாதங்களுக்கு முன், சில மணிநேரம் பெய்த மழைக்கே, ஏரியில் மழை நீர் தேங்கியது.இன்றளவில், ஏரிக்கரையோரம் உள்ள ஒரு சில வீடுகளின் கழிவுநீர் மட்டும், ஏரியில் விடப்பட்டு வருகிறது. அது தடுக்கப்பட வேண்டும்.தொடர் மழை பெய்யும் பட்சத்தில், ஏரியில் நிச்சயம் நீர் நிரம்பி, சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர் உயரும்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X