சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலைத் துறை அலட்சியம்: விபத்து ஏற்படும் அபாயம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் - சின்னசேலம் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சிய போக்கால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கச்சிராயபாளையம் - சின்னசேலம் சாலையில் கடத்துார் கிராமம் அருகே கல்வெர்ட் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் சீரமைப்பு பணி துவங்கி பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது.இந்த பணிக்காக சாலையோரத்தில் 10 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக பணி முடியாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். அந்த இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையோ, தடுப்போ அல்லது ரிப்ளக்டரோ வைக்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சிய போக்கால் பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இனியும் தாமதிக்காமல் பணியை விரைந்து முடிப்பதுடன், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X