சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்த 80 சவரன் மாயம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அயனாவரம் : சமையல் கலைஞர் வீட்டில் இருந்த, 80 சவரன் நகை மாயமானது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

அயனாவரம், சபாபதி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 54; சமையல் கலைஞர். அவரது மனைவி அன்புக்கரசி, 48. இவர்களது மகன் கிஷோர், 26, மகள் ஹர்ஷா, 24. வீட்டின் பீரோ சாவி எப்போதும், ஹர்ஷாவிடம் தான் இருக்கும். கடந்த, 18ம் தேதி பீரோ லாக்கரிலிருந்து பணம் எடுப்பதற்காக, ஹர்ஷா திறந்தபோது, அதிலிருந்த, 80 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது.இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி, வீட்டிலிருந்த அனைவரிடமும் விசாரித்ததில், யாரும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து, நேற்று அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X