பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு எதிர்ப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

நங்கநல்லுார் : நங்கநல்லுாரில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கொரோனா சிகிச்சை பிரிவு துவக்கியதற்கு, சுற்று வட்டார பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை, நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியில், ஸ்ரீனிவாசன் ராஜலட்சுமி நினைவு மருத்துவமனை செயல்படுகிறது.தனியார் மருத்துவமனையான இங்கு, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சுகாதாரத் துறை மூலம், நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள இந்த மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுற்று வட்டார பகுதி மக்கள் கூறியதாவது:சுகாதாரத் துறையால் அனுமதி வழங்கப்பட்ட மருத்துவமனை, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. அதுவும், முன் குடியிருப்பாக இருந்து, மருத்துவமனையாக மாற்றப்பட்டது.மேலும், அங்கு சிகிச்சை அளிப்பதால், அருகில் வசிப்போர், ஜன்னல், கதவுகளை மூடி பாதுகாப்புடன் இருக்கும்படி, மருத்துவமனை நிர்வாகம் எச்சரித்துள்ளது.குடியிருப்பின் மத்தி யில், போதிய பாதுகாப்பின்றி, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது. எனவே, இந்த உத்தரவை சுகாதாரத் துறை ரத்து செய்ய வேண்டும்.உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X