சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி  மோதி விபத்து அ.தி.மு.க., பிரமுகர் பலி 

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் அருகே லாரி மோதிய விபத்தில், அ.தி.மு.க.,பிரமுகர் இறந்தார்.

திண்டிவனம் அருகே ஒலக்கூரிலுள்ள பிள்ளையார்கோவில் தெருவில் வசித்தவர் குப்புசாமி, 53; மாற்றுத்திறனாளி. ஒலக்கூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர். குப்புசாமி நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 52: என்பவருடன் பைக்கில் மருவத்துார் சென்றுள்ளார். பின் இருவரும் ஒலக்கூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பைக்கை வெங்கடேசன் ஓட்டி வந்துள்ளார்.இவர்கள் இருவரும், ஓங்கூர் சோதனை சாவடி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் பேரி கார்டு மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் குப்புசாமி, அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த வெங்கடேசனை திண்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து குறித்து, ஒலக்கூர் போலீசார், மணப்பாறை தாலுகா, புரதக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன், 25; என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X