வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

Added : ஜூன் 27, 2020
Share

கள்ளக்குறிச்சி : வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இருந்து, கடந்த 8ம் தேதி பஸ் போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் இருந்து 40 சதவீத அரசு பஸ்களும், ஒரு சில தனியார் பஸ்களும் இயங்கின. இதனால், வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்வோர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்து பஸ் ஏறிச் சென்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், மண்டலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது.இந்த உத்தரவால் கள்ளக்குறிச்சி டெப்போவில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, மாவட்டத்திற்குள் தற்போது 20 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.மேலும், கள்ளக்குறிச்சி நகர பகுதியைச் சேர்ந்த பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால், சேலம் மெயின்ரோடு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள துணி, நகைக் கடைகள், காய்கறி மார்க்கெட் உட்பட அனைத்தும் மூடப்பட்டதால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், பயணிகள் மற்றும் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வருகை இல்லாததால் பஸ் நிலைய கடைகளும் மூடப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X