சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களை ஒருமையில் பேசியவருக்கு, 'காப்பு!'

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கண்ணகிநகர் : கண்ணகி நகரில், பெண்களை ஒருமையில் பேசியவரை, போலீசார் கைது செய்தனர்.

கண்ணகி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதாகர், 35; லாரி ஓட்டுனர். குடிசை மாற்று வாரியத்தில், தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, மாநகராட்சி சுகாதாரத் துறையை விமர்சித்து, சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டுள்ளார்.இதை தட்டி கேட்ட பகுதிவாசிகளை, தகாத வார்த்தையில் பேசி, தாக்க முயன்றார்.

நேற்று முன்தினம், போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.அந்த கோபத்தில், அவரது வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயை உடைத்து, அங்கு நின்ற பெண்களை தவறாக சித்தரித்து பேசி உள்ளார். இது தொடர்பாக, எல்லம்மாள், 40, என்பவர், கண்ணகி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.நேற்று, சுதாகரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X