பொது செய்தி

தமிழ்நாடு

உடலை அடக்கம் செய்ய உதவி கரம் நீட்டிய பெண் காவல் ஆய்வாளர்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை : பெண்ணின் உடலை அடக்கம் செய்ய, உதவிக்கரம் நீட்டிய பெண் காவல் ஆய்வாளரின் செயல், பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

ஓட்டேரி, சத்தியவாணிமுத்து நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி, 55. இவரும், அவரது இரண்டு சகோதரியரும், அதே பகுதியில் உள்ள நடைபாதையில், நீண்ட நாட்களாக வசித்து வந்தனர்.இவர்களுக்கு, அப்பகுதிவாசிகள் உணவளித்து வந்தனர். பிரபாவதி, சில நாட்களாக உணவருந்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் இறந்து, இரண்டு நாட்களுக்கு மேலானதால், உடல் அழுகியது. அவரது உடலை அடக்கம் செய்ய இயலாமல், அவரது சகோதரியர் தவித்தனர்.இது குறித்து தகவலறிந்த, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, நேற்று பெண்ணின் உடலை மீட்டு, இறுதி சடங்கு செய்தார்.உடல் அழுகியும், அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், காவல் ஆய்வாளரின் இந்த செயல், பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X