சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மமான முறையில் தீக்கிரையான டூ - வீலர்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அம்பத்துார் : குடிசை மாற்று வாரிய, அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைத்திருந்த, ஆறு இரு சக்கர வாகனங்கள், தீயில் எரிந்து நாசமாகின.

சென்னை, அம்பத்துார் அடுத்த அத்திப்பட்டு பகுதியில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. அதில், 850க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிப்போர், தங்களது, இரு சக்கர வாகனங்களை, குடியிருப்பு வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம்.நேற்று அதிகாலை, 4:30 மணி அளவில், 31வது பிளாக்கின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, ஆறு இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து, டயர்கள் வெடித்தன. அந்த சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

அம்பத்துார் தொழிற்பேட்டை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர்.ஆனாலும், அங்கு குடியிருக்கும் ஜான்சன், தணிகாசலம், சரோஜா, முத்துக்குமரன். வடிவேல், அந்தோணி ஆகியோரின், வாகனங்கள் முழுமையாக எரிந்தன. இது, விஷமிகளின் நாசவேலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X