பொது செய்தி

தமிழ்நாடு

சம்பளம் தர ரூ.1,200 கோடி கடன் வாங்கும் அரசு போக்குவரத்து கழகங்கள்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
TNSTC, Salary, bank loan

சென்னை : பஸ்கள் இயக்கம் முடங்கி உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் தர அரசு போக்குவரத்து கழகங்கள் வங்கிகளில் 1200 கோடி ரூபாய் கடன்வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கால் மூன்று மாதங்களாக பஸ்கள் செயல்பாடின்றி முடக்கப்பட்டு உள்ளன.இம்மாதம் முதல் 6000 பஸ்கள் இயக்கப்பட்டன.மண்டலங்களுக்குள் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ரத்தானதால் தற்போது 3500 பஸ்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

இயக்கத்தில் உள்ள பஸ்களிலும் 22 பேர் முதல் 30 பேர் வரை மட்டுமே பயணிப்பதால் இயக்கச் செலவானது சம்பளம் பராமரிப்பு செலவை விட 60 சதவீதம் கூடுதலாகிறது. ஏற்கனவே பஸ்களை இயக்காததால் வருமானம் இல்லாமல் பல்வேறு பணப்பலன்களை வழங்க முடியாமல் பணிமனைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்குள் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டிஉள்ளது. வருமானம் இல்லாததால் முக்கிய வங்கிகளில் 1200 கோடி ரூபாய் கடன் வாங்கும் முயற்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே கடனில் திணறும் நிலையில் தற்போது 1200 கோடி கடன் வாங்குவதால் மேலும் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூன்-202016:34:40 IST Report Abuse
 Muruga Vel சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பஸ்கள் இயங்குவதில்லை ..எல்லா பஸ்களும் தனியார் ... தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு அந்தந்த பகுதிகளில் பஸ் ..மினி பஸ் ..இயக்க அனுமதி தர வேண்டும் ..
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
27-ஜூன்-202013:29:56 IST Report Abuse
siriyaar அதாவது மக்கள் பெயரில் அதாவது ஓவ்ஒருவர் பெயரில் ரூ 200 கடன் வாங்கப்படுகிறது. இதற்கு மாத வட்டி மட்டும் 5 கோடி இருக்கும். இதை கட்ட பஸ் கட்டணம் ஏற்றப்படும். அரசியல் வாதிகளும் அரசு ஊழியர்களும் அதாவது 100க்கு 1 ஆள் நல்ல ஜாலியா இருக்க மீதி 99 பேர் குடிக்கனும், பஸ் கட்டணம் அதிகமாக கட்டணும் இந்த கருமத்திற்கு பிரிட்டிஷ்காரணுக்கு அடிமையாக இருப்பதே மேல்.
Rate this:
Cancel
Rajamani Ramasamy - Chennai,இந்தியா
27-ஜூன்-202013:28:52 IST Report Abuse
Rajamani Ramasamy இந்த மாதிரி சமயம் -40 % வரை சம்பளம் குறைத்து வழங்கலாமே ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X