சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் மகாலிங்கம் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பணியின் போது இறந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கு, அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.மாநிலம் முழுவதும் காலி யாக உள்ள சப் கலெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X