சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணி தடுத்து நிறுத்தம் ; திருநாவலூர் பெரிய ஏரியில் பரபரப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : திருநாவலுாரில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என குடிமராமத்து பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

திருநாவலுாரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியின் மதகு மற்றும் கரைகள் உட்பட 70 ஏக்கர் பரப்பளவை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு, ஏரியில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர்.தகவலறிந்த திருநாவலுார் ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டனர்.முதலில் ஏரி ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்.

அதன் பிறகு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். விவசாயிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X