அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீன பொருட்களை புறக்கணிப்போம் காங்., தலைவர் அழகிரி சூளுரை

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புவனகிரி : 'இந்திய எல்லையில், சீன ராணுவம் 2,263 முறை ஊடுருவியுள்ளது' என்று காங்., மாநிலத் தலைவர் அழகிரி கூறினார்.

கடலுார் மாவட்டம், கீரப்பாளையத்தில் காங்., சார்பில் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்., மாநில துணைத் தலைவர் திருமால் வளவன், மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் அழகிரி கூறியதாவது:இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதை உலகமே தவறான முடிவு என கண்டிக்கிறது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்.

மத்திய அரசை பொறுப்பான எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதால் தேசத்துரோகி என்கின்றனர். எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் ஊடுருவவில்லை என மோடி சொல்கிறார். அப்படியானால் இந்திய ராணுவ வீரர்கள் எப்படி இறந்தார்கள் என தெரிவிக்க வேண்டும். 1962 ம் ஆண்டிற்குப் பின் மேலும் இந்திய ராணுவம் வலிமையாக உள்ளது.கடந்த 2010- 2013ம் ஆண்டுகளில் சீன ராணுவம் 600 முறை ஊடுருவியதாக கூறினர். அதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

தற்போது 2,263 முறை சீன ராணுவம் ஊடுருவியுள்ளதை மறந்து விட்டனர். இது போன்ற கேள்விகளுக்கு மத்தியஅரசு பதிலளிக்கவேண்டும்.சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உரிய விசாரணை செய்திருக்கலாம். அருகில் உள்ள சிறையை, விட்டு 80 கி.மீ., தொலைவிற்கு விவசாரணைக்காக அழைத்துச் சென்றது குறித்தும், இருவர் மரணம் குறித்தும் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-ஜூன்-202010:33:32 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சீனாவிடம் காங்கிரஸ் வாங்கிய 300 கோடியை முதலில் திருப்பித் தரலாமே
Rate this:
Cancel
27-ஜூன்-202007:28:11 IST Report Abuse
Thangavel Vel நாமக்கல் இவர்களை இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்காதீர் மக்களே !!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X