கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 போலீசாருக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 போலீசாருக்கு கொரோனா

Added : ஜூன் 27, 2020
Share

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 470 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 321 பேருக்கு பரிசோதனை செய்ததில், 58 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், கோயம்புத்துார், சேலம் வட்டத்தில் பரிசோதனை செய்தவர்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்குவர்.இந்த 58 பேரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், மீதமுள்ள 57 பேரை சேர்த்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது. இதில் 325 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் இறந்தார். மீதமுள்ள 201 பேரில், 66 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளது. 135 பேருக்கு இல்லை. \\\

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.14 போலீசாருக்கு தொற்றுகள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசார் மற்றும் திருப்பாலப்பந்தல், திருக்கோவிலுார் கலால் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 போலீசார் என நேற்று ஒரே நாளில் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீசார் அச்சமடைந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X