சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலும் 16 பேருக்கு கொரோனா கடலுாரில் பாதிப்பு 932 ஆக உயர்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 16பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 932 ஆக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 916பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிப்பதாக மாவட்ட நிர்வாகம்அறிவித்திருந்தது. கொரோனா தொற்றுக்கு இது வரை 6பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 932 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, சேலத்தில் இருந்து கடலுார் திரும்பிய 5 பேர், மகாராஷ்டிரா மற்றும் சென்னையில் இருந்து சிதம்பரம் திரும்பிய 2 பேர், கொரோனா தொற்றால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த நெய்வேலியைச் சேர்ந்த 4 பேர், பரங்கிப்பேட்டை ஒருவர், கீரப்பாளையம் ஒருவர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று வரை 534பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். பாதித்த 392 பேர் சிதம்பரம், கடலுார், விருத்தாசலம், திருச்சி, சேலம், சென்னை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 22,171 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 932 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 18,741 பேருக்கு தொற்று இல்லை. 2,498பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன்தொடர்பில் இருந்தவர்கள், வெளி பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என 283 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X