சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் ஆண்டி குட்டை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம் : மேலப்பழங்கூர் ஆண்டி குட்டை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வருவாய்துறை அதிகாரிகள் வராததால் துார்வாரும் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது.

ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில் ஊராட்சி கட்டுப்பாட்டில் ஆண்டி குட்டை உள்ளது. மழைக்காலங்களில் இந்த குட்டையில் தேங்கும் நீரின் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். மேலும் அருகில் உள்ள விளை நில கிணறுகளில் தண்ணீர் தேங்கி விவசாய பணிகளும் பாதிக்காமல் நடைபெறும்.இந்த ஆண்டி குட்டையை துார் வார கடந்த 2018-2019ம் ஆண்டில் 72 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் துார்வாரும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பணிகள் மீண்டும் துவங்கியது.

ஆனால், அந்த குட்டையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதால் துார்வாரும் பணிகள் தடைபட்டது. இதையொட்டி ஆண்டி குட்டையை அளவீடு செய்ய, சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், சர்வேயருக்கு தகவல் அளிக்கப்பட்டது.ஆனால், அதிகாரிகள் யாரும் வராததால் துார் வாரும் பணி நடைபெறாமலேயே உள்ளன. இது குறித்து கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன், ஆண்டிகுட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X