இன்றைய (ஜூன் 27) விலை: பெட்ரோல் ரூ.83.59; டீசல் ரூ.77.61| Petrol priced at Rs. 83.59 per litre, diesel Rs. 77.61 | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜூன் 27) விலை: பெட்ரோல் ரூ.83.59; டீசல் ரூ.77.61

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27), பெட்ரோல் லிட்டருக்கு 83.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.61 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், இம்மாதம், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வருகிறது.


latest tamil news



சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல், 83.37 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர், 77.44 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று, லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து 83.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து 77.61 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X