சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலக வளாகத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் காவல் துறை, இ-சேவை மையம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால், இங்கு தினமும் பணி நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.அவ்வாறு வருவோர் தங்களது இரு சக்கரம் உள்ளிட்ட வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு 'ெஷட்' இல்லாததால் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். மேலும், வளாகத்தில் போலீஸ் நிலையம் உள்ளதால், மணல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் என ஒருபுறம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த இடையூறுகளைக் கடந்து, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அது மட்டுமின்றி, வளாகத்தில் சாலை போடப்படாமல் மண் சாலையாக இருப்பதால், மழை பெய்தால், தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாகி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில் முறையாக தார் சாலை அமைத்து தாலுகா அலுவலகம் வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்த 'ெஷட்' அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X