உளுந்துார்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரத்தில் ஜமாபந்தி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரத்தில் ஜமாபந்தி

Added : ஜூன் 27, 2020
Share

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) துவங்கியது.

உளுந்துார்பேட்டை பகுதியில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் 143 கிராமங்கள் உள்ளன. ஜமாபந்தியில் வருவாய் துறை தொடர்பாக ரேஷன் கார்டு, வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, சரியான மனுக்களுக்கு தீர்வு காணப்படுவது வழக்கம்.இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வி.ஏ.ஓ.,க்கள் மூலம் ஆன் லைனில் கிராம மக்களின் கோரிக்கைகள் பதிவேற்றம் செய்து, விசாரித்து தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் ஜமாபந்தி உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் துவங்கியது.ஆர்.டி.ஓ., சாய் வர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் காதர்அலி முன்னிலை வகித்தார்.

நேற்று ஆன்லைன் மூலம் எந்த மனுக்களும் வரவில்லை. ஜமாபந்தி வரும் ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது.சின்னசேலம்சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. தாசில்தார்கள் பாலசுப்ரமணியன், விஜயபிரபாகரன், பாண்டியன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வளர்மதி வரவேற்றார். ஜமாபந்தியில் அரசு அறிவித்துள்ள தோட்டக்கலை, விவசாய துறையில் நஞ்சை, புஞ்சை, குறுவை சாகுபடிகளின் வரி வசூல்கள் மற்றும் நிலுவையில் உள்ள கணக்குகளை திருத்தம் செய்ய வி.ஏ.ஓ.,க்களுக்கு சப் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மேலும் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் மனுவைக் கொடுக்க வருவாய் துறை அலுவலகம் செல்லாமல், ஆன் லைன் மூலம் chinnasalemtk@yahoo.in என்ற இணைய தளத்தில் புகார்களை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். தலைமை நில அளவர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓக்கள் பங்கேற்றனர். சங்கராபுரம்தாலுகா அலுவலகத்தில் துவங்கிய நிகழ்ச்சிக்கு, ஜமாபந்தி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.தாசில்தார் நடராஜன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், தலைமை நில அளவர் கலையரசன், வட்ட வழங்கல் அலுவலர் வைரக்கண்ணு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். வடபொன்பரப்பி குறுவட்ட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X