சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு காலம் முடியும் வரை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பகுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியும், முகக் கவசம் அணியாமலும் வெளியே வந்தவர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, டி.எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:உளுந்துார்பேட்டை உட்கோட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டல்களில் இரவு 8:00 மணி வரை பார்சல்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரங்களை மீறி வெளியே சுற்றுவோரை கண்காணிக்கும் வகையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, நிர்வாக உத்தரவை மீறி வெளியே சுற்றியோர், முகக் கவசம் அணியாதோர் என மொத்தம் 1,500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதில், எஸ்.பி., (பொறுப்பு) ஜெயக்குமார் பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த 10 நாட்களில் மட்டும் 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு டி.எஸ்.பி., கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X