பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை வீதியெல்லாம் வைரஸ் உலா; வீட்டுப்படி தாண்டினாலே கொரோனா தொற்றும்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Madurai, corona, coronavirus, madurai news, tamil nadu news, மதுரை,கொரோனா

மதுரை: மதுரையில் வீதியெல்லாம் கொரோனா வைரஸ் உலா வருவதால், மக்கள் வீட்டு வாசல் படி தாண்டினாலே பாதிப்பு தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தேவையின்றி யாரும் வெளியில் வராதீர்கள்.

மாவட்டத்தில் கொரோனா ஆட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியம், பரவை பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் ஒரு மண்டலம் என்று இல்லாமல், பரவலாக அனைத்து பகுதிகளிலும் வைரஸ் பரவிவிட்டது. பாதிக்காத பகுதிகள் சில தான். இச்சூழலில் ஊரடங்கை அலட்சியம் செய்தால் இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வீடுகளை விட்டு வெளியில் வந்தாலே வைரஸால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.


latest tamil news


தேவையின்றி வெளியில் திரிவதை மக்கள் தவிர்க்க வேண்டும். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெளியில் வருவது ஆபத்தில் முடிந்துவிடும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் அத்தியாவசிய தேவைக்கு வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் வருவது நலம். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை அலட்சியம் செய்யாதீர். சில நிமிடங்கள் காத்திருந்து பொருட்கள் வாங்குவதால் தவறில்லை. அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் வீடு திரும்பியதும் நன்றாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும்.

மார்ச் இறுதி முதல் ஏப்ரல் வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மதுரைவாசிகள் சிறப்பாக கடைபிடித்தனர். அப்போது மதுரையில் பாதிப்பு குறைவு தான். இப்போது உச்சத்தில் உள்ளது. எனவே பழைய கட்டுப்பாட்டை மீண்டும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news




'84284 25000'


84284 25000 என்ற அலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். இது மாநகராட்சி உதவி மைய தொடர்பு எண். யாருக்காவாது காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்பு கொள்ளலாம். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இது மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
27-ஜூன்-202016:40:49 IST Report Abuse
Ray அறம் கொன்ற திராவிஷ ஆட்சிகளின் அறப்பிறழலில் பலன் இன்று நாறி நலம் குலையும் தமிழகம்....... நல்லது மற்ற வட மாநிலங்களில், உலக நாடுகளில் என்ன காரணம்னு சொல்லுங்க
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூன்-202012:55:12 IST Report Abuse
A.George Alphonse மதுரை மீனாட்சி குடிகொண்டுள்ள மதுரைக்கு ஒரு குறையும் வராது. தவறு செய்த பாண்டிய மன்னனையும்,மதுரையும் கண்ணகியால் எப்போதோ அழித்துவிட்டது. இப்போதுள்ள மதுரை புனிதமானது. இந்த காரோண வைரஸால் ஒன்னுமே செய்ய முடியாது. மக்கள் தைரியமாக அரசு கட்டளைகளை சீரியஸாக கடைபிட்டித்தால் இந்த வைரஸ் ஓடியே போய்விடும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
27-ஜூன்-202016:05:53 IST Report Abuse
தமிழ்வேள்கண்ணகியால் அழிக்கப்பட்ட மதுரையில் அறம் குடியிருந்தது..அறம் கொன்றதனால் அழிக்கப்பட்டது. தற்போதைய மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுதும் திராவிட நாத்திக இந்து இந்திய விரோதிகளால் அறம் கொல்லப்பட்டு அறமற்ற ஆட்களால் நிரம்பியுள்ள காரணத்தால், இயற்கை தரும் தண்டனையே இந்த மாதிரி பெரும் தொற்று நோயகளும் அழிவுகளும்..அறம் கொன்ற தமிழகம் சிந்திக்கவேண்டும்.. இனியும் திராவிச நாத்திகர்களுக்கு இடமளிக்க வேண்டுமா என்று.....எழுபதாண்டு தமிழகத்தின் அறம் கொன்ற திராவிஷ ஆட்சிகளின் அறப்பிறழலில் பலன் இன்று நாறி நலம் குலையும் தமிழகம்.......
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
27-ஜூன்-202012:50:31 IST Report Abuse
Ray நான் சொல்வதை இந்த உலகமே கேட்கவேண்டும் இந்த உலகமே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்பது சிலரின் சித்தாந்தம் என்பது பழைய கதை லேட்டஸ்ட் அனைவரின் (ஒவ்வொருவரின்?) சித்தாந்தமாக பரவி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X