தமிழ்நாடு

'குடிசை பகுதி மக்களிடம் தொற்று குறித்த புரிதல் அதிகரித்துள்ளது!'

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 'குடிசை பகுதி மக்களிடம் தொற்று குறித்த புரிதல் அதிகரித்துள்ளது!'

சென்னை : ''தொண்டு நிறுவனங்கள் வழங்கிய, தொடர் விழிப்புணர்வு காரணமாக, குடிசை பகுதி மக்களிடம், தொற்று குறித்த புரிதல் அதிகரித்துள்ளது,'' என, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில், 1,500 படுக்கை கொண்ட, தனிமை முகாம் அமைக்கும் பணி நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட பின், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: குடிசை பகுதிகளான, 1,979 இடங்களில், 92 தொண்டு நிறுவனங்கள், தொடர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, குடிசை பகுதி மக்களிடம் முக கவசம் அணிந்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற புரிதல் அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்க, 2,300 சிறப்பு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பாதித்தவர்களை தொடர்பு கொண்டு, தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், தினமும் பேசுகின்றனர்.சென்னையில், 54 தனிமை முகாம்களில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 4,350 பேர் தங்கியுள்ளனர். கூடுதல் தனிமை முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்பட்டால், திருமண மண்டபங்கள் தனிமை முகாமாக மாற்றப்படும். முழு ஊரடங்கில், பொதுமக்கள் வீட்டில் இருப்பதால், தொற்று பாதித்தவர்களை எளிதில் கண்டறிய முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X